உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

சிவகங்கை: காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் காவல் தெய்வமான கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் கடந்த 1975, 1989, 2008 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது 15 ஆண்டுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கொப்புடையநாயகி அம்மன், பரிவார மூர்த்திகளின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !