இறப்பிலும் சிரித்தவர்
ADDED :1067 days ago
போலிகார்ப் ஆதி திருச்சபையில் ஒருவர், இவருக்கு வயது 86. எப்போதும் உற்சாகமாக செயல்படுவார். ரோம் அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆண்டவரை வணங்கினால் மரண தண்டனை என உத்தரவிட்டது. அதை அவர் பொருட்படுத்தாமல், ‘‘இத்தனை வருடங்களாக ஆண்டவர் என்னை வழிநடத்தினார். இப்போது மகிழ்ச்சியோடு மரணத்தை ஏற்கிறேன்’’ என்றார். அவர் உயிருடன் எரிக்கப்பட்ட போதும் சிரித்தபடி இருந்தார்.