/
கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி விரதம்; கால பைரவரை வழிபட கடன்தொல்லை நீங்கும்.. நினைத்தது நடக்கும்
தேய்பிறை அஷ்டமி விரதம்; கால பைரவரை வழிபட கடன்தொல்லை நீங்கும்.. நினைத்தது நடக்கும்
ADDED :871 days ago
இன்று தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும். காலபைரவர் சிவ அம்சம் கொண்டவர். இவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபடுவது சிறப்பு. ஞாயிறன்று ராகுவேளையில் (மாலை 4.30-6 மணிக்குள்) வழிபடுவர். எதிரி பயம், மனக்குழப்பம், கடன்தொல்லை, தொழிலில் பிரச்னை, திருஷ்டி தோஷம் நீங்க இவரை வழிபடுவர். "கால என்றால் "கருப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். சிவனுக்கு "காலகண்டன் என்ற பெயருண்டு. விஷம் குடித்ததால் கருநீல நிற கழுத்தைக் கொண்டவர் என்பது இதன் பொருள். பைரவரும் கரியவரே. பெரிய சிவாலயங்களில் காலபைரவர் சந்நிதி இருக்கும். இவரே சிவன்கோயில் காவல் தெய்வமாவார். சில ஊர்களில் தனிக் கோயிலும் உண்டு. சீர்காழி தோணியப்பர் கோயிலில் அஷ்டபைரவராக 8 பைரவசந்நிதிகள் உண்டு. தேய்பிறை அஷ்டமி மட்டுமல்ல, ஞாயிறு ராகு காலத்திலும் இவரை வழிபடுவது சிறப்பு.