உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொறுப்பில் இருப்பவர்கள் விழிப்புடன் பேச வேண்டும்; உதயநிதியின் சனாதன பேச்சுக்கு மைசூரு மடாதிபதி கண்டனம்

பொறுப்பில் இருப்பவர்கள் விழிப்புடன் பேச வேண்டும்; உதயநிதியின் சனாதன பேச்சுக்கு மைசூரு மடாதிபதி கண்டனம்

மைசூரு; சனாதனம் பற்றிய, தமிழக அமைச்சர் உதயநிதி கருத்துக்கு, ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சனாதனம் பற்றி தமிழக அமைச்சர் உதயநிதி, சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக நாடு முழுதும் போராட்டங்கள் நடக்கின்றன. போலீஸ் நிலையங்களில் பா.ஜ., –ஹிந்து அமைப்பினர் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில், மைசூரில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி நேற்று அளித்த பேட் டி: மதத்தை பற்றி தெரியாதவர்கள் தான், தனது மதம், பிற மதங்களை பற்றி பேசுகின்றனர். தீவிர நாத்திகர்களாக இருந்தாலும், பிற மதங்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் வலுக்கட்டாயமாக வேறு மதத்திற்கு மாற்றிவிட முடியாது. சனாதனம் என்ற சொல்லுக்கு, ‘நித்தியம்’ என்று பொருள். பொறுப்பில் இருப்பவர்கள் விழிப்புடன் பேச வேண்டும். கிறிஸ்துவம், முஸ்லிம், பவுத்தம், சமணத்தை விட ஹிந்து மதம் தொன்மையானது. உலகில் உள்ள ஒவ்வொரு நபரும், வித்தியாசமாக இருக்கின்றனர். ஆனால் , அனைவரும் உயிர் வாழ ஆக்சிஜன் தேவை. இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றும் விவாதம் எப்படி துவங்கியது என்று தெ ரியவில்லை. பெயர் மாற்றம் குறித்து எந்த விவாதமும் இல்லை என்று, மத்திய அரசே கூறியுள்ளது. இதனால் மேற்கொண்டு விவாதிக்க வேண்டிய, அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !