கிருஷ்ணர் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :813 days ago
சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.ஆலங்குளம் கிராமத்தில் உள்ள பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இன்று காலை 10:00 மணி அளவில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்கள் பாமா ருக்மணி சமேத கிருஷ்ணர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எஸ். ஆலங்குளம் கிராம பொதுமக்கள் கும்பாபிஷேக விழா குழுவினர் செய்திருந்தனர்.