ஆவணி அமாவாசை ; வீட்டில் குலதெய்வத்தை விளக்கேற்றி வழிபடுங்க
ADDED :1115 days ago
அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம். தர்ப்பணம் என்பதற்கு திருப்தியுடன் செய்வது என்று பொருள். தீர்த்தக் கரைகளில் பிதுர் வழிபாடு செய்வது குடும்பம் தழைக்க உதவும். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நல்ல பலன் தரும். இன்று வீட்டில் குலதெய்வத்தை வழிபட செல்வச்செழிப்புடன் வாழலாம். பிதுர்பூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிட்டும்.