ஸ்ரீரங்கத்தில் அரங்கனை தரிசிக்க அலைமோதிய பக்தர்கள்
ADDED :786 days ago
திருச்சி: 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது, அனைத்து திவ்யதேச பெருமாளையும் தரிசனம் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலை அலையாய் குவிந்த பக்தர்கள், காத்திருந்து அரங்கநாதரை தரிசனம் செய்தனர்.