சந்தன காப்பு அலங்காரத்தில் செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
ADDED :1100 days ago
செஞ்சி: புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்திருந்தனர். செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்திருந்தனர். பகல் 12 மணிக்கு சிறப்பு வழிபாடும் பக்தர்களுக்கு பிரசாத விநியோகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.