கோவையில் கோடி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நிகழ்ச்சி
ADDED :762 days ago
கோவை : கோடி விஷ்ணு நாம பாராயணம் நிகழ்ச்சி கோவை இடையர்பாளையத்தில் உள்ள வி. ஆர். ஜி கல்யாண மண்டபத்தில் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதன் முதல் நிகழ்வாக அதிகாலை 5.030 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து கோ பூஜை நடைபெற்றது. காலை 7-00மணி முதல் 10,000 பத்தாயிரம் முறை விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்த வண்ணம் இருந்தனர். இந்த நிகழ்வானது மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.