ஜல்ஜிலானி ஏகாதசி; சூரத் நகரில் சுவாமி நாராயணருக்கு தீர்த்தவாரி
ADDED :748 days ago
குஜராத் : ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம்நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி ஜல்ஜிலானி ஏகாதசியாக வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சுவாமி நாராயணன் குருகுல அர்ச்சகர்கள் தீர்த்தவாரி நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.