சங்கமேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா இன்று ஆரம்பம்
ADDED :4709 days ago
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நாளை முதல் தொடர்ந்து, பத்து நாட்கள் நடக்க உள்ளது.பவானி கூடுதுறையில் உள்ள ஸ்ரீ வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று முதல், 24ம் தேதி வரை பல்வேறு உபயதாரர்கள் மூலம் தினமும் காலை, 11 மணிக்கு வேதநாயகியம்மனுக்கு மகா அபிஷேகமும், பகல், ஒரு மணிக்கு மகா தீபாராதனையும், மாலை, 6 மணிக்கு சுவாமிக்கு விஷேச சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பின், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. பத்தாவது நாளான விஜயசதமி அன்று, 1,008 சங்குகளால் பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகம், மகா தீபாரதனை நடக்கிறது. பக்தர்கள் எளிதாக வந்து தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை, கோவில் உதவி ஆணையாளர் நடராஜன் செய்து வருகிறார்.