உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலியுக வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு

கலியுக வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு

தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கலியுக வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று (07ம் தேதி) புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீகலியுக வெங்கடேச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பதி வெங்கடேச பெருமாள் இங்கு கலியுக வெங்கடேச பெருமாளாக காட்சி தருகிறார். நித்ய சொர்க்க வாசல் வழியாக பெருமாளை தரிசனம் செய்தால் வைகுண்ட பதவி நிச்சயமாக கிட்டும். இன்றைய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !