உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் பவித்ர உற்சவம் துவக்கம்

திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் பவித்ர உற்சவம் துவக்கம்

சென்னை, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், மூன்று நாள் பவித்ர உற்சவம் துவங்கியது. உற்சவத்தை முன்னிட்டு, 9ம்தேதி அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் நிகழ்வு நடந்தது. பவித்ர உற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 மணிவரையிலும், மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணிவரையிலும் யாகம் வளர்க்கப்பட்டு, ஹோமங்கள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆரத்தியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை 12ம் தேதி வரை பவித்ர உற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !