எங்கெங்கு காணினும் சக்தியடா!
ADDED :5139 days ago
உலகிலுள்ள அனைத்திலும் வியாபித்து அவற்றை இயக்குபவள் ஆதிபராசக்தி. மார்க்கண்டேயனைக் காக்க சிவபெருமான் கால சம்ஹாரம் செய்தபோது, எமனை உதைத்தது சக்தியின் பாகமாகிய இடது பாதமே. இராவணனை அழிக்க சீதை என்ற சக்தியாகவும்; கவுரவர்களை அழிக்க திரவுபதி என்ற சக்தியாகவும்; சூரபத்மாதியரை அழிக்க தன் புதல்வனுக்கு சக்திவேல் கொடுத்தவளாகவும்; கிருஷ்ணனுடன் பாமா எனும் சக்தியாக இருந்து நரகாசுரனை வதைத்தவளும்; மகிஷாசுரன் உள்ளிட்ட பல தீயவர்களை அழித்து நல்லோரைக் காத்தவளும் அந்த சக்தியே. அவளை வணங்கினால் அனைத்துத் தீமைகளிலிருந்தும் நம்மைக் காப்பாள்.