உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிராமி அலங்காரத்தில் அம்பாள்; வடபழனி சக்தி கொலுவில் பக்தர்கள் தரிசனம்

அபிராமி அலங்காரத்தில் அம்பாள்; வடபழனி சக்தி கொலுவில் பக்தர்கள் தரிசனம்

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாள் நேற்று, அபிராமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சக்தி கொலுவில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்கள் குறித்த காட்சிக்கு அருகில், பக்தர்கள் அதை ஒலியாக கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தன. மாலையில் லலிதா சகஸ்ரநாம பாராயணம், வேத பாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினரின் கொலு பாட்டு நடந்தது. சிறார்களிடம் ஆன்மிகத்தை வளர்க்கும் வகையில், கொலுவில் தினமும் அறிவுத்திறன் போட்டி நடத்தி, பரிசுகள் வழங்கப்படுகின்றன. பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது. நேற்று மாலை அபிநயா நாட்டிய பள்ளி மாணவர்களின் பரதநாட்டியமும், லஷ்மன் ஸ்ருதி குழுவினரின் பக்தி பாடல் இசைக் கச்சேரியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !