அயோத்தி ராமரை தரிசிக்க 60 நாட்கள் இலவச பயணம்.. முழு செலவையும் தமிழக பா.ஜ.க ஏற்கும்; அண்ணாமலை
அயோத்தியில், பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட, 2020 ஆக., 5ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மூன்று தளங்களாக உருவாகி வரும் இந்த கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கோவிலை சுற்றி, 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி வால்மிகி ஆராய்ச்சி நிலையம், மூலவர் மண்டபம் உள்ளிட்டவை அமைய உள்ளன. மூலவர் கோபுரம், 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ல் நடைபெறும் என கட்டுமான குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், கும்பாபிஷேகம் முடிந்த பின் அடுத்த 60 நாட்களுக்கு தமிழக மக்கள் இலவசமாக ரயிலில் அயோத்தி சென்று ராமரை தரிசித்து வரலாம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதற்கான முழு செலவையும் தமிழக பா.ஜ.க. ஏற்கும் என்றும் புதுக்கோட்டையில் என் மண், என் மக்கள் பயணத்தின் போது பேசிய அவர் தெரிவித்துள்ளார்.