ஆப் ஷம்பு கோயில் (ஜம்மு)
ADDED :4746 days ago
ஜம்மு நகரத்திலுள்ள ரூப்நகரில் சத்ரியன் என்னும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இவை பழங்காலத்து கற்கோயில். இங்குள்ள லிங்கம் சுயம்புவாக தோன்றியது என்று புராணங்கள் கூறுகிறன. பழங்காலத்தில் இவ்விடம் மக்கள் வசிக்கும் இடமாக இல்லாமல் அடந்த காட்டுபகுதியாக இருந்தது. பசு மாடு மற்று எருமைகள் அனைந்தும் புல் மேய்ச்சலுக்கு பிறகு அனைத்து பால்களையும் லிங்கத்தில் வந்து சுரந்துவிடும்.
இந்த புனித இடத்தில் நிறைய மத சம்பந்தமான இடங்கள் இருக்கின்றன. மிக முக்கியமானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன: பேதா தேவி தீர்த்தம், கபடேஸ்வரா தீர்த்தம், மற்றும் பலவகையான நாகம் அவை நரன் நாகம், ஷேஸ் நாகம், பஞ்சதர்னி, மாமலேஸ்வர், கபல் மோசன், வாசுகி நாகம்.