கந்த சஷ்டி; பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜை
ADDED :1046 days ago
கோவை; கந்த சஷ்டி நிறைவு நாளையொட்டி ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பாலதண்டபாணி ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் உற்சவர் தங்கக்காப்பு மற்றும் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.