உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் பெருமாள் கோயிலில் ஜன.21 ல் 1008 கலசாபிஷேகம்

திருப்புத்தூர் பெருமாள் கோயிலில் ஜன.21 ல் 1008 கலசாபிஷேகம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஜன.21ல் ஸஹஸ்ராஷ்ட கலசாபிஷேக உத்ஸவம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் முதன் முறையாக நடைபெறும் இந்த 1008 திருக்குட நீராட்டு விழா இரண்டு நாட்கள் நடைபெறும். நவ.20  மாலை 4:00 மணிக்கு யாகசாலையில் பூர்வாங்க பூஜைகள் நடந்து 1008 கலசங்கள் பிரதிஷ்டை நடைபெறும். தொடர்ந்து பிரதான ஹோமம்  நடைபெறும். இரவு 8:00 மணிக்கு  பூர்ணாகுதி,வேத விண்ணப்பம், சாத்துமுறை,பிரசாத விநியோகம் நடைபெறும். ஜன.21 காலை 7:00 மணிக்கு புண்யாகம், அக்னி ஆராதனம்,மூல மந்திர ஹோமம் நடைபெறும். தொடர்ந்து உத்ஸவ சுவாமிக்கு 1008 கலங்களிலான புனிதநீரால் அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பூர்ணாகுி நடந்து பிரதான கடம் மூலவருக்கு புறப்பாடு ஆகி அபிஷேகம் நடைபெறும். கலசங்கள்  பக்தர்களிடமிருந்து உபயமாக பெறப்படுகிறது. ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !