உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அதோ பார் ஐயப்பன்... சபரிமலையில் காடு மலை கடந்து வந்த பக்தர்கள்.. மனமுருகி வழிபாடு

அதோ பார் ஐயப்பன்... சபரிமலையில் காடு மலை கடந்து வந்த பக்தர்கள்.. மனமுருகி வழிபாடு

சபரிமலை; சபரிமலையில் மண்டல காலம் நடந்து வரும் நிலையில், மூன்று நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல்லுக்கு, 10 கி.மீ., முன்பே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அங்கு இரண்டு மணி நேரம் காத்திருந்த பின் பம்பை வருகின்றனர். பம்பையிலும் நான்கு மணி நேரம் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை, 6:00 மணிக்கு தரிசனம் பதிவு செய்திருந்த பக்தர் அடுத்த நாள் மதியம் தான் தரிசனம் செய்ய முடிந்தது. அப்படியானால், ஆன்லைன் முன்பதிவால் என்ன பலன் என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவை அனைத்தையும் கடந்து, நேற்று ஸ்ரீ கோயில் முன்பு தன் குழந்தைக்கு ஐயப்பனை காட்டி மனமுருகி வழிபாடு செய்த பக்தரை பார்த்து பிற பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !