ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம்
ADDED :993 days ago
கோவை; ராம் நகர் கோதண்ட ராமசுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் கடைசி சோமவார திங்கட்கிழமை மற்றும் மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேக பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.