உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாத்தூர் கோவிலில் திருப்பவித்ரோத்சவம்!

நல்லாத்தூர் கோவிலில் திருப்பவித்ரோத்சவம்!

நெட்டப்பாக்கம்: நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோவிலில், திருப்பவித்ரோத்சவம் நாளை துவங்குகிறது. புதுச்சேரி அடுத்த நல்லாத்தூர் பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில், 14ம் ஆண்டு திருப்பவித்ர உற்சவம் நாளை (23ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டி, நாளை மாலை 6 மணிக்கு எஜமான் சங்கல்பம், பகவத் அனுக்கிரஹம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, பவித்ர பிரதிஷ்டை நடக்கிறது.24ம் தேதி காலை 7 மணிக்கு கலச ஸ்தாபனம், பவித்ரா சமர்ப்பணம், ஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை, மாலை 6 மணிக்கு ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. 25ம் தேதி காலை 9 மணிக்கு திருமஞ்சனம், ஹோமம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு, பிரதிஷ்டை சாற்று முறை, தீர்த்த பிரசாத வினியோகமும், மாலை 7 மணிக்கு சுவாமி சன்னதி உள் புறப்பாடு நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவல் குழுவினர் மற்றும் நல்லாத்தூர் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !