காமாட்சி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்
ADDED :4742 days ago
கள்ளக்குறிச்சி: நவராத்திரி விழாவையொட்டி காமாட்சி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த 15ம் தேதி முதல் நவராத்திரி விழா நடந்து வருகிறது. அதையொட்டி 24ம் தேதி விஜயதசமி வரை தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மாலையில் உற்சவ அம்மன் நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருள செய்து கொலுக்காட்சியும், ஆராதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. நேற்று காமாட்சி அம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை சங்க தலைவர் வேலு தலைமையிலான விஸ்வகர்ம கைவினைஞர்கள், நகைத் தொழிலாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.