நாளை ஆருத்ரா அபிஷேகம் ; ஆடல்வல்லானின் அபிஷேகம் காண ஆனந்த வாழ்வு கிடைக்கும்!
ADDED :730 days ago
ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும். மார்கழி திருவாதிரையில் ஆடல்வல்லானின் அபிஷேகம் காண ஆனந்த வாழ்வு கிடைக்கும்!