மேட்டுப்பாளையத்தில் மலர் காவடி பெருவிழா
ADDED :667 days ago
மேட்டுப்பாளையம்; மாநில முருகா பக்தர்கள் பேரவை ( முருக பக்தி இயக்கங்களின் கூட்டமைப்பு) சார்பில் மேட்டுப்பாளையத்தில் மலர் காவடி பெருவிழா பேரணி சாய்ராம் மஹாலில் இருந்து சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வரை சென்றது. இதில் சிரவை ஆதீனம் ராமானந்த குருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தென் சேரிமலை முத்து சிவராமசாமி அடிகளார் ஆகியோர் தலைமை ஏற்று வந்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.