திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தொடர் திருவிழாக்கள்
ADDED :667 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (டிச. 26) முதல் ஜன.1 தொடர் திருவிழாக்கள் நடக்கிறது. கோயிலில் திருவாதிரை திருவிழா டிச. 18ல் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை காலை மாணிக்க வாசகர் தேரோட்டமும், இரவு 7:00 மணிக்கு கோயில் முன்பு ராட்டின திருவிழாவும் நடக்கிறது. (டிச. 27 ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனி பூச்சப்பரங்களில் கிரிவல நிகழ்ச்சி நடக்கிறது. டிச. 28ல் எண்ணெய் காப்பு உற்ஸவ விழா துவங்குகிறது. ஜன. 1 அன்று நிறைவடைகிறது.