அன்னூர் பெருமாள் கோவிலில் பகவத் கீதை வகுப்பு
ADDED :752 days ago
அன்னூர்; அன்னூர் பெருமாள் கோவிலில் பகவத் கீதை வகுப்பு இன்று நடக்கிறது.
ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில், அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், கீதை காட்டும் பாதை, இன்றைய பகவத் கீதை, என்னும் தொடர் வகுப்பு கடந்த வாரம் துவங்கியது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடைபெற உள்ளது இன்று மாலை 6 :00 மணிக்கு பெருமாள் கோவிலில், பகவத் கீதை வகுப்பு மற்றும் பகவத் கீதையில் உள்ள ஸ்லோகங்கள் பாடும் நிகழ்ச்சி நடக்கிறது. பொதுமக்கள் பங்கேற்று இறையருள் பெற ஹரே கிருஷ்ணா இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.