உத்தரகோசமங்கையில் ஐயப்பன் மண்டல பூஜை
ADDED :616 days ago
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் வளாகத்தில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 28 வது மண்டல பூஜை விழா நடந்தது.நடராஜர் அலங்கார பரதநாட்டிய மண்டபத்தில் ஐயப்பன் உருவப்படம் வைத்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. சரண கோஷம், நாமாவளி, பஜனை உள்ளிட்டவைகளை நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பாடினர். பூஜைகளை குருசாமி சண்முகநாதன், சற்குருநாதர் பூபதி ஆகியோர் செய்திருந்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 18 படிகளிலும் சூடம் ஏற்றி தானாக பற்றி கொள்ளும் வகையில் அமைந்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.