உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராம சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா துவக்கம்

கோதண்டராம சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா துவக்கம்

கோவை; ராம் நகர், கோதண்டராம சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி உற்சவ விழா நேற்று 9ம் தேதி முதல் 11.1.2024 வரை நடைபெறுகிறது. இதில் முதல் நாள் நிகழ்வாக காலை 8:30 மணிக்கு  சங்கல்பம், கலச ஸ்தாபனம், ஜெபம், பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை நடைபெற்றது. இன்று (10ம் தேதி)  புதன்கிழமை காலை அஷ்டோத்திர சதா மகா ஹரி வாயு துதி ஹோமம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பூர்ணாகதி, தீபாரதனை நடைபெற்றது. நாளை 11ம் தேதி அதிகாலை 5 மணிக்கு  ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் பவமான ஹோமம், வாயு சுக்த ஹோமம் நடைபெறுகிறது. ஸ்ரீ ராமர் சீதா அனுமான் மூல மந்திரங்கள் பாடப்பெற்று மகா தீபாராதனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !