சமயத்தில் காப்பவள்!
ADDED :5130 days ago
ஐந்து தலைநாகம் குடைபிடிக்க மாரியம்மன் அருள் கோலத்தில் வீற்றிருக்கும் தலம் சமயபுரம். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் இக்கோயில் கட்டப்பட்டது. விஜயநகர மன்னர்களின் குலதெய்வமான இந்த அம்மன், அவர்களின் வீழ்ச்சிக்குப்பின், காவலர்களால் ஒரு தந்தப்பல்லக்கில் வைக்கப் பட்டு தெற்கு நோக்கி கொண்டு வரப்பட்டது. சமயபுரம் வந்ததும் அம்மன் சிலையை யாராலும் அசைக்க முடியவில்லை. இதன்பின், இங்கே அம்மனுக்கு கோயில் எழுப்பப் பட்டது. இவ்வூரைக் கண்ணனூர் என்றும் அழைப்பர். இதனால், சாய்ந்தாள் சமயபுரம் சாதித்தாள் கண்ணபுரம் என்ற சுலவடையும் உண்டானது. ரங்கநாதரின் தங்கையாக போற்றப்படும் இந்த அம்பிகையை ஆடிவெள்ளியில் வழிபடுவது சிறப்பு. இக்கோயில் காலை 4மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.