ராமேஸ்வரத்தில் வடமாநில பக்தர்கள் பொங்கல் கொண்டாட்டம்
ADDED :604 days ago
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்ற வடமாநில பக்தர்கள் பொங்கல் விழா கொண்டாடினார்கள்.ராமேஸ்வரத்தில் தனியார் மகாலில் வடமாநில ஆன்மிக பக்தர் குழு நடத்தும் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சி ஜன., 5 முதல் ஜன., 15 வரை நடக்கிறது. இதில் குஜராத், உ.பி., ம.பி., ராஜஸ்தான் சேர்ந்த 1000 க்கும் மேலான பக்தர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் விழா யொட்டி ராமேஸ்வரத்தில் வட மாநில பக்தர்கள் பொங்கல் சமைத்து விழாவாக கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இதன் ஏற்பாடுகளை பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன், முருகன் செய்திருந்தனர்.