தை கிருத்திகை; ராஜஅலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி
ADDED :597 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை கிருத்திகையையொட்டி ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கிருத்திகையையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உளுந்தூர்பேட்டையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் தை கிருத்திகையையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் செல்லையா மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.