உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரமிக்க வைக்கும் அயோத்தி பால ராமரின் திருமேனியை அலங்கரிக்கும் அணிகலன்கள் எவை தெரியுமா?

பிரமிக்க வைக்கும் அயோத்தி பால ராமரின் திருமேனியை அலங்கரிக்கும் அணிகலன்கள் எவை தெரியுமா?

அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் சிலையின் வைர கிரீடம் மதிப்பு ரூ. 11 கோடி தகவல் வெளியாகி உள்ளது. இந்த கிரீடத்தை குஜராத்தை சேர்ந்த பிரபல டைமண்ட் வியாபாரி ஒருவர் அன்பளிப்பாக வழங்கி உள்ளார். கையில் இருக்கும் வில்லும், அம்பும் முழு தங்கத்தாலானவை. ராமர் சிலை முழுவதும் தங்கம், வைரம், வைடூரியம் என ஜொலிக்கிறது. இவையாவன;

அயோத்தி பால ராமரின் அணிகலன்கள்!

* வைரம், முத்து, மாணிக்கம், வைர கற்கள் பதித்த தங்க கிரீடம்; அதோடு இணைந்த காதணிகள்

* நெற்றியில் வைரம், மாணிக்கக்கற்களுடன் கூடிய திலகம்.

* கழுத்தில் விஜயந்தி, கந்தா, படிக நெக்லஸ்கள்; இடுப்பில் முத்து, வைரம், மாணிக்கம், மரகத கற்கள் பதித்த தங்க பட்டை.

* இடது கையில் முத்து, மாணிக்கம், மரகதக்கற்கள் பதித்த வில். வலது கையில் தங்க அம்பு.

* இரு கைகளிலும் வைரங்கள் பதித்த வளையல், தங்க பட்டையில் ரத்தினங்கள் பதித்த கவசம், முத்துப்பதித்த மோதிரங்கள்.

* மார்பில் வைரம், மாணிக்கக்கற்களால் செய்யப்பட்ட கவுஸ்துப மணி.

* கால்களில் மாணிக்கம் பதித்த கொலுசுகள்; வைரம், மாணிக்கக்கற்கள், தங்க மணிகள் கோர்த்த மோதிரங்கள்.

* 5 வயது பால ராமர் முன் வெள்ளியால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !