தைப்பூசம்; கோவையில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை
ADDED :981 days ago
கோவை ; கோவை சுந்தராபுரம் காமராஜ நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் ஃபேஸ் - 01 ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் மலர் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.