பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் கொடியேற்றம்
ADDED :632 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. பழநி முருகன் கோயிலின் உபகோவிலான பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் நேற்று கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் சேவல், அன்னம், மயில், காளை, ஆட்டுக் கிடா, பூதம், சிங்கம், யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி நகர்வலம் வருதல் ஆகியன நடக்கும். பிப். 5ல் இருவடம் பிடித்து இழுக்கும் திருத்தேரோட்டம் நிகழ்வு நடக்க உள்ளது. மலைப்பகுதியிலேயே இது போன்ற தேரோட்டம் சிறப்பாக நடப்பது பூம்பாறை குழந்தைவேலப்பர் கோயிலில் மட்டுமே. இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிவது வழக்கம்.