மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :644 days ago
பல்லடம்; மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது. பல்லடம் அடுத்த, மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் கடந்த டிச., மாதம் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி, தினசரி மண்டல பூஜைகள் நடந்து வந்தன. நேற்று, 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. முன்னதாக, காலை முதல் சிறப்பு பூஜைகள், வேள்விகள் துவங்கின. தொடர்ந்து, காலை, 11.30 மணிக்கு பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் கோவிலை சுற்றி வலமாக எடுத்துவரப்பட்டு, மகிமாலீஸ்வரர், மரகதாம்பிகை மற்றும் மூலவர் முத்துக்குமாரசாமிக்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் சிவன், அம்மன் மற்றும் முத்துக்குமாரசாமி ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.