கர்நாடக ஸ்ரீ மடம் சங்கராச்சாரியார் கோவையில் சிறப்பு பூஜை
ADDED :644 days ago
கர்நாடக மாநிலம் ஸ்ரீ மடம் ஹரிஹரபுரம் சிக்மங்களூரில் உள்ள ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா ஸ்வாமிகள் கோவை ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் கடந்த ஜன., 31ம் தேதி முதல் பூஜைகள் நடத்தி வருகிறார். இந்த நிகழ்வானது பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல் நிகழ்வாக 31ல் ஸ்ரீசக்கர நவாவர்ண பூஜை நடைபெற்றது. பிப்., 01ல் விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் லட்சுமி நரசிம்ம சகஸ்ரநாமம் நடைபெற்றது. பிப்., 2ல் அபிராமி அந்தாதி மற்றும் ஸ்ரீ சக்கர நவாவர்ண பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பிப்., 3ல் நாம சங்கீர்த்தனம், பிப்., 4ல் திருப்புகழ் மற்றும் ஸ்ரீ சக்கர நவாவரண பூஜைஆகியன நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.