உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலிஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை; நந்தி அபிஷேகம் கண்டு பக்தர்கள் பரவசம்

பாடலிஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை; நந்தி அபிஷேகம் கண்டு பக்தர்கள் பரவசம்

கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடலுார், திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, இன்று மாலை 4:00 மணிக்கு நந்தி பகவானுக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உட்பட 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !