உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம் பிப்.14 ல் துவக்கம்.. 24 ல் தெப்பம்

திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம் பிப்.14 ல் துவக்கம்.. 24 ல் தெப்பம்

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில்  மாசித் தெப்ப உத்ஸவம் பிப்.14 ல் துவங்குகிறது. பிப்.24 காலையிலும், இரவிலும் தெப்பம் நடைபெறும்.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். பிப்.14ல்  மாலை 6:10 மணிக்கு மேல் சேனை முதல்வர் புறப்பாடு உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடைபெறும். பிப்.15 காலை 7:48  மணிக்கு மேல்  பெருமாள் திருமண மண்டபம் எழுந்தருளி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து கொடிமரத்திற்கு புறப்பாடாகி காலை 10:16 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும்.  மாலையில்   காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கும். பின்னர்  இரவில் பல்லக்கில் பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியருடன் திருவீதி புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் சிம்மம், ஹனுமன்,கருடன்,சேஷன், குதிரை,வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறும். 6ம் திருநாளில் இரவில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், 7 ம் திருநாளில் பெருமாளுக்கு சூர்ணாபிேஷகமும்,  இரவில் தங்கப்பல்லக்கில் புறப்பாடும் நடைபெறும். பிப்.23  காலையில் 8:00 மணி அளவில்  வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் கோயிலிலிருந்து சுவாமி புறப்பாடாகி தெப்பக்குளம் எழுந்தருளலும்,  காலை 10:02 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெறும்.  பின்னர் தெப்பக்குள மண்டபம் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.பிப்.24 ல்  காலை 10:48 மணிக்கு பகல் தெப்பமும், இரவு 7:30 மணிக்கு மேல் இரவு தெப்பமும் நடைபெறும்.  பிப்.25 காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும்,  இரவில் சுவாமி தங்கப் பல்லக்கில் ஆஸ்தானத்திற்கு எழந்தருளலும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !