எமனேஸ்வரம் பெருமாள் கோயிலில் பிப்., 16 ல் ரத சப்தமி விழா
ADDED :627 days ago
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் ரத சப்தமி விழா பிப்., 16 அன்று நடக்கிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி விழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இதன்படி பிப்., 16 காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நிறைவடைந்து, பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் அலங்காரமாகிறார். அன்று காலை 8:00 மணி தொடங்கி பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எமனேஸ்வரம் அனைத்து தெருக்களிலும் வலம் வருவார். தொடர்ந்து பக்தர்கள் சிறப்பு பூஜைகளை நடத்தி மாலை 6:00 மணிக்கு திருக்கோயிலை அடைவார். விழாவிற்கான ஏற்பாடுகளை ரத சப்தமி விழா குழுவினர் மற்றும் எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.