பழநி சண்முக நதிக்கரையில் தை அமாவாசை தர்ப்பணம்
ADDED :624 days ago
பழநி; பழநி, தை அமாவாசையை முன்னிட்டு சண்முக நதிக்கரையில் முன்னோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் அளித்தனர்.
பழநியில் தை அமாவாசை பிதுர் வழிப்பாட்டிற்காக சண்முக நதிக்கரையில் குடும்ப முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். இதில் அவரவர் குல வழக்கப்படி தர்ப்பணம் அளித்தனர். எள், பச்சரிசி கலந்த பிண்டம் தயாரித்து குடும்ப பிதுர்களை நினைத்து வழிபட்டு, ஆற்றில் கரைத்தனர். அதன்பின் ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திரதானம் வழங்கினர். மேலும் வீடுகளில் பெரியோர்களின் படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.