காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நாகர் சிலைகள் பிரதிஷ்டை
ADDED :614 days ago
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மண்டபத்தின் பின்புறத்தில் இன்று அதிகாலை 4:00 மணிக்கு நாகர் பிரதிஷ்டை நடைபெற்றது. நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு முன்னதாக, கணபதி பூஜை, பூர்ணாவசனம், கலச ஸ்தாபனம் ஹோமம் பூஜை மற்றும் பூர்னாவூதிபூஜைகள் பிரம்மாண்டமான முறையில் செய்யப்பட்டன. தொடர்ந்து நாகர் பிரதிஷ்டை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் கோதண்டபாணி பாபு மற்றும் கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.