உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கொண்டத்து மாகாளியம்மன் கோயில் குண்டம் விழா கோலாகலம்

கோவை கொண்டத்து மாகாளியம்மன் கோயில் குண்டம் விழா கோலாகலம்

கோவை; கொண்டத்து மாகாளியம்மன்  கோயில் குண்டம் விழா விமரிசையாக நடந்தது. குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை, வெள்ளலூர் மைதானம் பகுதியில் அமைந்துள்ள கொண்டத்து மாகாளியம்மன்  கோயில் குண்டம் விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வந்தது. விழாவில் இன்று குண்டம் விழா விமரிசையாக நடந்தது.  முன்னதாக முளைப்பாரி எடுத்து வருதலும், புண்ணியார்ச்சனை, தீர்த்த காவடிகள் பூஜை, குண்டம் வளர்த்தல், அம்பன் அழைத்தல் ஆகியவை நடந்தன. இதையடுத்து. குண்டம் இறங்குதல் நடந்தது. கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்க, ஆண்கள், பெண்கள் அவரை பின் தொடர்ந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !