உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்திருப்பதியில் ரதசப்தமி விழா; தங்கத்தேரில் உலா வந்த மலையப்ப சுவாமி

தென்திருப்பதியில் ரதசப்தமி விழா; தங்கத்தேரில் உலா வந்த மலையப்ப சுவாமி

காரமடை ; காரமடை அருகே உள்ள தென்திருப்பதி ஸ்ரீ வாரி கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்கத்தேரில் வீதி உலா வந்து அருள்பாலித்தார்.

காரமடை அருகே உள்ள தென்திருப்பதி ஸ்ரீ வாரி கோயிலில் இன்று ரதசப்தமி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்கத்தேரில் மாட வீதிகளில் உலா வந்தார். பக்தர்கள் கையில் விளக்கு ஏந்தி ஆரத்தி எடுத்தனர். கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !