உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோயிலில் தேர் திருவிழா

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோயிலில் தேர் திருவிழா

கடலூர்; திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோயிலில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவில் தேர் திருவிழா விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினசரி சிறப்பு அபிஷேக, ஆராதணை நடைபெற்று வந்தது. இன்று முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !