திருக்கோவிலூரில் தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா
ADDED :634 days ago
திருக்கோவிலூர்; ரதசப்தமியை முன்னிட்டு திருக்கோவிலூரில் தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ரதசப்தமி முன்னிட்டு இன்று அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாத சேவை, 5:30 மணிக்கு நித்திய பூஜை, 7:30 மணிக்கு தேகளீசபெருமாள் சூரிய பிரபை வாகனத்தில், ரத்தினங்கி அணிந்து எழுந்தருளி வீதி உலா நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.