/
கோயில்கள் செய்திகள் / மாசி செவ்வாய்; கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை
மாசி செவ்வாய்; கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை
ADDED :948 days ago
கோவை; ஆர். எஸ். புரம் உழவர் சந்தை அருகே இருக்கும் வின்சென்ட் காலனியில் உள்ள வர சித்தி விநாயகர் - கல்யாண சுப்பிரமணியர் கோவிலில் மாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் புஷ்ப அலங்காரத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.