உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயிலில் மாசிக்களரி சிறப்பு வழிபாடு

பகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயிலில் மாசிக்களரி சிறப்பு வழிபாடு

கமுதி; கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் மாசிக்களரி விழாவை முன்னிட்டு பகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயிலில் 1001 ஆடுகள் பலியிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் பகவதி பரஞ்ஜோதி அம்மன், அக்னி வீரபத்திரன், நிறைகுளத்து அய்யனார் கோயில் உள்ளது.கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசிகளரி விழா நடைபெறும்.இந்தாண்டு விழாவை முன்னிட்டு 1001 ஆடுகள் பலியிட்டும், பொங்கல் வைத்து மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது. விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்திலிருந்து ஏராளமானோர்​ கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !