நட்டாலத்தில் பாத சேவை, சிவ சகஸ்ரநாம அர்ச்சனை
ADDED :591 days ago
களியக்காவிளை; கிள்ளியூர் ஒன்றிய தர்ம ரக்ஷண சமிதி சார்பில், சிவராத்திரியை முன்னிட்டு நட்டாலத்தில் பாத சேவை, சத்சங்கம், பஜனை மற்றும் சிவ சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. நட்டாலம் மகாதேவர் திருக்கோயில் வளாகத் தில் காலை 8.30 மணி முதல் சிவ பக்தர்களுக்கு பாதசேவை நடந்தது. தொடர்ந்து நவகுமாரி விஜயகுமார் திருவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் சங்கர நாராயண சேவா அறக்கட்டளை தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார். பிற்பகல் சத்சங்கம், பஜனை, சிவ சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.