சேதுக்கரையில் சிறப்பு வழிபாடு!
ADDED :4743 days ago
கீழக்கரை: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில், அகோபில மடம் அழகிய சிங்கர் நாராயண யதீந்த்ர மகா தேசிகன், ரங்கநாத யதீந்த்ர மகா தேசிகன் தலைமையில் ஏராளமான அகோபில மட சிஷ்யர்களும், பக்தர்களும் புனித நீராடினர். பின், திருப்புல்லாணி அகோபில மடத்தில் நரசிம்மர், ராமானுஜர் வழிபட்ட கிருஷ்ணருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மாலையில், ஆதிஜெகன்னாதர் கோயிலில் மங்களா சாசனம் புரிந்தனர். ஏற்பாடுகளை சென்னை அகோபில மடம் மேலாளர் தேசிகன், பாஷ்யம், ஸ்ரீதர், முத்துக்கிருஷ்ணன் செய்தனர்.